search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    டெல்லியில் பட்டாசுக்கு தடை - பசுமை தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

    டெல்லியில் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கொரானோ தொற்று குறித்த அச்சம் உள்ள நிலையில், காற்றின் தரம் மோசமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யபபட்டது.

    இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், டெல்லியில் கொரானோ காலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தீர்ப்பளித்து இருந்தது. தீர்ப்பாயத்தின் இந்த முடிவை சரியான முடிவுதான் என்று சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. 

    காற்று மாசு டெல்லியில் குறைவாக உள்ள இடங்களில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற்று பட்டாசுகளை விற்பது தொடர்பாக தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு மேலும் விளக்கம் தர தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தடை விதிக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
    Next Story
    ×