search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    நீட் தேர்வு நடந்தே தீரும் -தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

    நீட் தேர்வு தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் இருப்பினும் நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை என மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    “நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மான்டவியாவும் அண்மையில் ஆலோசித்து விரைவில் நீட் தேர்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×