search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் தங்கும் அறை குறித்த புகார்களை செல்போனில் தெரிவிக்க ஏற்பாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 17,310 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 37 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
    திருப்பதி :

    திருப்பதிஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளில் தங்கி ஓய்வெடுத்த பின்னர் கோவிலுக்கு வருகிறார்கள். பக்தர்கள் தங்கும் அறைகளில் குறைபாடுகள் உள்ளதாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் உள்ள சுபதம் வழியில் பக்தர்கள் தரிசனத்துக்குச் செல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கோகுலம் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது:-

    திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் பதிவு செய்வதற்காக 6 இடங்களில் கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வாடகை அறை பெறுவது எளிதாகிறது. இந்த அறைகளில் நாற்காலிகள், மேஜைகள், கட்டில் மெத்தைகள், குழாய்களில் நீர்வரத்து, மின்விசிறி பழுது தொடர்பாக பக்தர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

    பக்தர்கள் இது குறித்த புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெரிவிக்க எஸ்.எம்.எஸ் வசதி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான செல்போன் எண் விரைவில் வெளியிடப்படும். அதில் ‘கம்ப்ளைன்ட் டிராக்கிங் சிஸ்டம்’ இணைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 17,310 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 37 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் வருமானமாக ரூ1 கோடியே 89 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×