search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் முழு ஊரடங்கு
    X
    கேரளாவில் முழு ஊரடங்கு

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேரளாவில் 24, 25-ந் தேதிகளில் முழு ஊரடங்கு

    கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருவதால், அதை கட்டுப்படுத்த கேரள அரசு பேரிடர் மேலாண்மை சட்டப்படி, கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று கொரோனாவுக்கு 105 பேர் பலியானார்கள். அதனால், இந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 617 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருவதால், அதை கட்டுப்படுத்த கேரள அரசு பேரிடர் மேலாண்மை சட்டப்படி, கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

    மேலும் வருகிற 23-ந் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் பிரமாண்ட கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தி ஒரே நாளில் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×