என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெகாசஸ் விவகாரம்... செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி
Byமாலை மலர்21 July 2021 10:51 AM GMT (Updated: 21 July 2021 2:01 PM GMT)
தியாகிகள் தினத்தையொட்டி ஆன்லைன் வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தா:
“ஜனநாயகத்தை உருவாக்கும் ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றிலும் பெகாசஸ் ஊடுருவி உள்ளது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது. எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன். முன்னெச்சரிக்கையாக எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன். மத்திய அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்துவிடும். நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும், செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என மம்தா பானர்ஜி பேசினார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்கின்றன. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் பெகாசஸ் விவகாரம் குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தியாகிகள் தினத்தையொட்டி ஆன்லைன் வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“ஜனநாயகத்தை உருவாக்கும் ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றிலும் பெகாசஸ் ஊடுருவி உள்ளது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது. எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன். முன்னெச்சரிக்கையாக எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன். மத்திய அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்துவிடும். நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும், செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என மம்தா பானர்ஜி பேசினார்.
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மம்தாவின் உரையை தொலைக் காட்சி வாயிலாக எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டனர்.
இதையும் படியுங்கள்... ஆட்சியை பிடிக்க பாஜக எந்த நிலைக்கும் செல்லும்: குமாரசாமி
Next Story
×