search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

    புதிய மந்திரிகளை சபையில் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆட்சேபனை தெரிவித்தார்.
    புதுடெல்லி: 

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதுபோல் ஒய் எஸ். ஆர் காங்கிரசின் மத்திலா குரு மூர்த்தி, பா.ஜ.க எம்பி. மங்கள் சுரேஷ் அங்காடி, ஐ.யூ.எம்.எல் எம்.பி. அப்துஸ்சமத் சமதன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    விஜய் வசந்த் தமிழில் பதவியேற்றுகொண்டார் , பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பேசினார்.

    தொடர்ந்து அவையில் புதிய மந்திரிகளை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது;-

    பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்ப்ட்டு உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பல மந்திரிகள்  விவசாயிகளின் பிள்ளைகள் எனகூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபை புதிய மந்திரிகளை சபையில் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆட்சேபனை தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

    மூத்த நடிகர் திலீப் குமார் மற்றும் மூத்த தடகள மில்கா சிங் உட்பட இந்த ஆண்டு உயிர் இழந்த எம்.பி.க்கள் மற்றும் பிரமுகர்களுக்கு மாநிலங்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மாநிலங்களவை மதியம் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்தனர்.
    Next Story
    ×