search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளப்பெருக்கால் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு
    X
    வெள்ளப்பெருக்கால் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு

    8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- இமாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

    கொரோனா மூன்றாவது அலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  கங்க்ரா, மண்டி, சம்பா, பிலாஸ்ப்பூர், சோலன், சிர்மூர், குல்லு மற்றும் சிம்லா ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 முதல் 20 வரை கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஞ்சள் அலர்ட்டைக் காட்டிலும் ஆரஞ்சு அலர்ட் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மாநிலத்தில் 22ம் தேதி வரை மழையின் தாக்கம் இருக்கும் என மேலும் கூறப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கு

    இந்த வார துவக்கத்தில் பாக்சு நாக் பகுதியில் பலத்த மழையின்போது பள்ளிகள், விடுதிகளில் மழை நீர் புகுந்தது.

    கொரோனா மூன்றாவது அலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். மழை நிற்கும் வரை, சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    Next Story
    ×