search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிகளுடன் மா.சுப்பிரமணியன் சந்திப்பு
    X
    மத்திய மந்திரிகளுடன் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

    மத்திய மந்திரிகளுடன் மா.சுப்பிரமணியன் சந்திப்பு- 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்

    தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தேவை அதிகமாக உள்ளது. எனவே தேவைப்படும் தடுப்பூசிகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.
    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மத்திய மந்திரிகளை சந்திப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்றார்.

    அவருடன் கொரோனா தடுப்பு திட்ட அதிகாரி செந்தில்குமார், தேசிய சுகாதார குழுமத்தின் திட்ட அதிகாரி தரேஸ் அகமது ஆகியோரும் சென்றனர். நேற்று இரவே டெல்லி சென்ற இந்த குழுவினர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தனர்.

    பகலில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்கள். அதன் பிறகு சுதாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டலியாவை சந்தித்து பேசினார்கள்.

    இந்த சந்திப்பின்போது கல்வி, சுகாதாரம் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி வலியுறுத்தினார்கள்.

    மொத்தம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொண்டு சென்றனர். அந்த மனுக்களை இந்த சந்திப்பின்போது சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் வழங்கினார்கள்.

    இந்த சந்திப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழகத்துக்கு தேவையான பல்வேறு வி‌ஷயங்களை நேரில் வலியுறுத்தினோம். முக்கியமாக 13 கோரிக்கைகளுடன் இந்த சந்திப்புகள் நடந்தது.

    * தமிழகத்துக்கு
    கொரோனா தடுப்பூசி
    தேவை அதிகமாக உள்ளது. எனவே தேவைப்படும் தடுப்பூசிகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

    * மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    கொரோனா தடுப்பூசி

    * புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும்.

    * தேசிய நல்வாழ்வு திட்ட செயலாக்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும். கூடுதல் நிதியும் ஒதுக்க வேண்டும்.

    * தமிழகத்தில் 3,900 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நோய்க்கு கூடுதலாக மருந்துகள் வழங்க வேண்டும்.

    * நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

    * கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்.

    * அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    * செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் தடுப்பூசிகள் தயாரிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    * கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது. எனவே வருங்காலங்களில் இந்த தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் மேலாண்மை திட்டங்களை உருவாக்க வேண்டும்.

    * தேசிய சுகாதார குழு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    * மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதம், சுகாதாரத்துறை மந்திரிக்கு எழுதிய 2 கடிதங்கள், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதம், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்த மனு, எழுதிய கடிதம், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் ஆகியவற்றின் நகல்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.


    Next Story
    ×