search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகா வைரஸ் பாதிப்பு
    X
    ஜிகா வைரஸ் பாதிப்பு

    கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 23 ஆக உயர்வு

    ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு பாறசாலையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கே முதன்முதலாக கண்டறியப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    கொரோனா பாதிப்பு அனைத்து மாநிலங்களிலும் குறைந்துவரும் நிலையில், கேரளாவில் குறைந்தபாடில்லை. தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 7ஆயிரத்து 798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 14 ஆயிரத்து 539 பேர் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அங்கு ‘ஜிகா’ என்ற புதிய வைரஸ் பரவிவருகிறது.

    டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் மூலமாகவே இந்த வைரசும் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது-.

    ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு பாறசாலையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கே முதன்முதலாக கண்டறியப்பட்டது. பின்பு அந்த பகுதியை சேர்ந்த மேலும் 13 பேருக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிந்தது. இவர்களையும் சேர்த்து 19 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்து வந்தது. அனைவரும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் 38 வயது மதிக்கத்தக்க டாக்டர், சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்த 41 வயது பெண், பூந்துறையை சேர்ந்த 35 வயது வாலிபர், திருவனந்தபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆகியோர் ஆவர்.

    இதையடுத்து அவர்களும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து கேரள மாநிலத்தில் ‘ஜிகா’ வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினரின் சோதனை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

    மாநிலத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். நேற்று மொத்தம் 15 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் டாக்டர், சிறுமி, வாலிபர், பெண் ஆகிய 4 பேருக்கு
    ஜிகா வைரஸ்
    பாதிப்பு இருந்தது. ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. மற்ற 10 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    நாட்டில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் தினசரி பாதிப்பு கூடுவதும் குறைவதுமாக உள்ளது. மாநிலத்தில் பொது முடக்கத்துக்கு வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


    Next Story
    ×