search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை
    X
    கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை

    மேகதாது அணையை கட்டியே தீருவோம்- கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

    மேகதாது அணை விஷயத்தில் கர்நாடகாவிற்கு மத்திய அரசு நீதி வழங்கும் என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. 

    மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் தீர்மானங்கள் மத்திய அரசிடம் வழங்கப்பட உள்ளது.

    மேகதாது

    இதுபற்றி பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    “மத்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். கர்நாடகா இதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். அணையின் கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு, எங்களால் முடிந்த அனைத்து ஆவணங்களையும் முன்வைப்போம். கர்நாடகாவிற்கு மத்திய அரசு நீதி வழங்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் பேசினார்.

    இதற்கு பதிலடி கொடுத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என்றார்.
    Next Story
    ×