search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை - 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

    நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும் என ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அதிகரித்து வரும் கொரோனா தொற்றை  கட்டுப்படுத்த உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    இது தொடர்பாக அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில அரசுகளுக்கு , சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். நாட்டில் மொத்தம் 73 மாவட்டங்களில் அதிகபட்சமாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் உள்ளன. நாட்டின் 73 மாவட்டங்களில் 46 மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்தவை.

    ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

    ராஜேஷ் பூஷண்

    நாட்டில், தினசரி கொரோனா  பாதிப்பு குறைந்து வந்தாலும், வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும், தொற்று பரவும் வேகத்தின் அறிகுறியையும் கண்காணிக்க வேண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியம். தொற்றை கட்டுப்படுத்துவதற்கு , தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×