search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றும் பூபேந்திர யாதவ்
    X
    மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றும் பூபேந்திர யாதவ்

    மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் மந்திரியாக பொறுப்பேற்ற பூபேந்திர யாதவ்

    பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டு, 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
    புதுடெல்லி:

    நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டது. புதிய மந்திரிகள் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். பின்னர் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அலுவலகத்தில் பொறுப்பேற்ற பூபேந்திர யாதவ்

    இந்நிலையில், புதிதாக பதவியேற்ற மந்திரிகள் இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர். பாஜக தலைவர் பூபேந்திர யாதவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். அதன்பின்னர் அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கோப்பில் கையெழுத்திட்டார். 

    தனக்கு இந்த பொறுப்பை ஒப்படைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக பூபேந்திர யாதவ் கூறினார்.
    Next Story
    ×