search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்... மத்திய மந்திரிகள் ராஜினாமா குறித்து ப.சிதம்பரம் கருத்து

    செயல்கள் சரியாக நடைபெற்றால் அதன் பாராட்டுகள் பிரதமரைச் சாரும் என்றும், தவறாக நடந்தால் மந்திரி மீது தான் பழி போடுவார்கள் என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் செய்யப்பட்டு 43 பேர் இன்று மத்திய மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர். சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ வர்தன், கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட 12 முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். 

    மந்திரிகள் ராஜினாமா குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

    ‘மத்திய சுகாதாரத்துறை மந்திரி, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி ராஜினாமா செய்திருப்பதன்மூலம், கொரோனா பெருந்தொற்றை கையாளுவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வி விட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ராஜினாமா, மற்ற மந்திரிகளுக்கு ஒரு பாடம். செயல்கள் சரியாக நடைபெற்றால் அதன் பாராட்டுகள் பிரதமரைச் சாரும், அதுவே தவறாக நடந்தால் மந்திரி மீது தான் பழி போடுவார்கள்’ என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    Next Story
    ×