search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.சிவக்குமார்
    X
    டி.கே.சிவக்குமார்

    கர்நாடக காங்கிரசுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.கே.சிவக்குமார்

    நிர்வாகிகள் நியமன பார்வையாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நிர்வாகிகளின் கருத்துகளை கேட்க உள்ளார். நானும் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை விரைவில் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிர்வாகிகள் நியமனம் குறித்த பணிகளை மேற்பார்வையிட ஒரு பார்வையாளர் நியமிக்கப்படுகிறார். புதிய நிர்வாகிகள் நியமனத்தின்போது எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளையும் கேட்கிறோம். இதுகுறித்து அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    நிர்வாகிகள் நியமன பார்வையாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நிர்வாகிகளின் கருத்துகளை கேட்க உள்ளார். சில பகுதிகளில் சிறிய அளவில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நானும் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    Next Story
    ×