search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவுக்கு பலி
    X
    கொரோனாவுக்கு பலி

    கர்நாடகத்தில் கொரோனா பலி 35 ஆயிரத்தை தாண்டியது

    கர்நாடகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலத்தில புதிதாக 3,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 71 ஆயிரத்து 112 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 3,382 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 43 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 111 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

    ஒரே நாளில் 12,763 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 32 ஆயிரத்து 242 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 505 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 813 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மைசூருவில் 367 பேர், தட்சிண கன்னடாவில் 339 பேர், ஹாசனில் 265 பேர், குடகில் 209 பேர், சிவமொக்காவில் 150 பேர், பெலகாவியில் 116 பேர், சிக்கமகளூருவில் 109 பேர், உடுப்பியில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    21 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 11 பேரும், தட்சிண கன்னடவில் 15 பேரும், தாவணகெரேயில் 12 பேரும், மைசூருவில் 14 பேரும், பல்லாரியில் 9 பேரும் என மொத்தம் 111 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.

    கர்நாடகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×