search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்த வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 வசூல்

    அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கான கூடுதல் மதிப்புக்கூட்டிய சேவைகளுக்கான கட்டணங்களில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
    புதுடெல்லி:

    நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:-

    அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கான கூடுதல் மதிப்புக்கூட்டிய சேவைகளுக்கான கட்டணங்களில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, ரூ.15 முதல் ரூ.75 வரை கட்டணங்கள் விதிக்கப்படும்.

    மாதத்தில் 4 இலவச பரிமாற்றங்களைத் தாண்டி பணம் எடுக்கும் சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். நான்கு முறை தாண்டி வங்கி அல்லது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது, ஒவ்வொரு முறைக்கும் ஜி.எஸ்.டி.யுடன் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    பாரத ஸ்டேட் வங்கி

    சேமிப்பு வங்கி கணக்குதாரர்கள், வங்கி மற்றும் ஏ.டி.எம்.கள், பணம் போடும் எந்திரங்களில் மேற்கொள்ளும் பணமில்லாத பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

    இந்த வாடிக்கையாளர்கள், ஒரு நிதியாண்டில் 10-க்கு மேல் பயன்படுத்தும் செக் இதழ்களுக்கும் கட்டணம் உண்டு. 10 இதழ்களுக்கு மேல், 10 இதழ்கள் கொண்ட செக் புத்தகத்துக்கு ரூ.40, 25 இதழ் செக் புத்தகத்துக்கு ரூ.75, அவசர செக் புத்தகத்துக்கு ரூ.50 கட்டணம். இவற்றுடன், ஜி.எஸ்.டி.யும் உண்டு.

    ஆனால் மூத்த குடிமக்களுக்கு செக் புத்தக சேவைகளுக்கு கட்டணம் இல்லை.
    Next Story
    ×