search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவால் 51 பேர் பாதிப்பு

    இந்தியாவில் தற்போது உள்ள 4 தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானவை. மேலும், இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
    புதுடெல்லி: 

    நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினரான மருத்துவர் வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை  கொரோனாவால் இதுவரை 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். 

    இந்தியாவில் தற்போது உள்ள 4 தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானவை. மேலும், இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில்  கர்ப்பிணி பெண்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். 

    கொரோனா  தடுப்பூசி

    இந்த 4 தடுப்பூசிகளும் (கோவேக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக்-வி மற்றும் மாடர்னா) பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானவை. தடுப்பூசிக்கும், மலட்டு  தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 

    இதையும் படியுங்கள்.... இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

    சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசியான மாடர்னாவுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.  இந்த தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×