search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன்
    X
    பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்: நரேந்திர மோடி பாராட்டு

    சிறு தொழில் முனைவோர், சுயதொழில் புரிவோர், சுற்றுலா துறையினர் என பலதரப்பினருக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.
    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான மருத்துவ வசதிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களின் செலவு குறைவதுடன் வருமானம் அதிகரிக்கும். வேளாண் நடவடிக்கைகள் மீண்டு எழும்.

    சிறு தொழில் முனைவோர், சுயதொழில் புரிவோர், சுற்றுலா துறையினர் என பலதரப்பினருக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். உற்பத்தியும், ஏற்றுமதியும் பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
    Next Story
    ×