search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    அரசியலில் பரபரப்பு: உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து பேசிய சஞ்சய் ராவத்

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஏற்கனவே கூறியபடி மகா விகாஸ் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அதன் முழு பதவிகாலமும் நீடிக்கும் என சரத்பவார் ஏற்கனவே கூறியுள்ளார்
    மும்பை :

    மராட்டியத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில் இருந்து கூட்டணி ஆட்சியில் சலசலப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவா் சஞ்சய் ரவாத் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும் இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்தவருமான சரத்பவரை நேரில் சந்தித்து பேசினார்.

    முன்னதாக முதல்-மந்திரி
    உத்தவ் தாக்கரே
    யின் அதிகாரப்பூர்வ குடியிருப்பான வர்ஷா பங்களாவுக்கு சென்ற அவர் முதல்-மந்திரியிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். கடந்த 3 நாட்களில் இதுபோன்ற சந்திப்பு நிகழ்வது 2-வது முறையாகும். இந்த சந்திப்பு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து நிருபர்கள் நீங்கள் சரத்பவாரிடம் இருந்து ஏதாவது செய்தியை முதல்-மந்திரிக்கு கொண்டு சேர்க்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சஞ்சய் ரவாத், “உங்களுக்கு ஏதாவது தகவலை சொல்லவேண்டும் என்றால் கூறுங்கள். நான் சரத்பவாரிடம் கொண்டு சேர்க்கிறேன் என்றார்.

    மேலும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “ தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஏற்கனவே கூறியபடி மகா விகாஸ் கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அதன் முழு பதவிகாலமும் நீடிக்கும் என சரத்பவார் ஏற்கனவே கூறியுள்ளார்” என்றார்.
    Next Story
    ×