search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விபத்து நடைபெற்ற இடம்
    X
    விபத்து நடைபெற்ற இடம்

    இமாசல பிரதேசத்தில் சோகம் - பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

    இமாசல பிரதேசத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சிம்லா:

    இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என துணை ஆணையாளர் ஆர்.கே. கவுதம் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி

    கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

    மேலும், தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×