search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானந்தாங்கி கப்பலை ஆய்வு செய்த ராஜ்நாத் சிங்
    X
    விமானந்தாங்கி கப்பலை ஆய்வு செய்த ராஜ்நாத் சிங்

    இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி கப்பல் அடுத்த ஆண்டு கடற்படையில் இணையும் -ராஜ்நாத் சிங்

    கொச்சி கடற்படைத் தளத்தில் விமானந்தாங்கி கப்பலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
    கொச்சி:

    இந்தியா தயாரிக்கும் முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்த். இந்த கப்பல் கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்படையில் இணைக்கப்படும் என்றார். இந்த கப்பல் இந்தியாவின் பெருமை என்றும், 
    சுயசார்பு இந்தியா
    வின் சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.

    விருந்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்

    அதன்பின்னர் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் ராஜ்நாத் சிங் மதிய உணவு அருந்தினார். இந்த விருந்தில் கடற்படை தளபதி கரம்பீர் சிங்கும் பங்கேற்றார்.
    Next Story
    ×