search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி, மோடி
    X
    மம்தா பானர்ஜி, மோடி

    கோவேக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் கிடைக்க ஏற்பாடு: பிரதமருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா கடிதம்

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் பிரதமருக்கு மம்தா கடிதம் எழுதியுள்ளார்.
    இந்திய நிறுவனம் பாரத் பயோடெக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் செலுத்தப்படுகிறது.

    இந்திய அரசு இலவசமாக வெளிநாட்டிற்கும் கோவேக்கின் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ரஷியாவின் ஸ்புட்னிக் வி, சீனாவின் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் கோவிஷீல்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    ஆனால் கோவேக்சின் தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. பெரும்பாலான நாடுகள் இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொண்டவர்கள் தங்களுடைய நாட்டிற்கு வருதை தரலாம் எனத் தெரிவித்துவிட்டது. ஆனால் இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரதமர் தலையிட்டு உடனடியாக கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை விரைவாக பெற்றதர வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்ட மாணவர்கள் எந்தவித இடையூறுகளையும் எதிர்கொள்ளக் கூடாது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், தொழில் செய்பவர்கள், கல்வி மற்றும் பல விசயங்களுக்காக செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×