search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    யோகா தின நிகழ்ச்சியில் 17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்பு- மத்திய அரசு தகவல்

    நாட்டில் நடைபெற்ற பல்வேறு யோகாதின நிகழ்ச்சியில் 42 லட்சத்து 28 ஆயிரத்து 802 குழந்தைகள் பங்கேற்று இருப்பது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி கடந்த 21-ந் தேதி நாட்டில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் பெண்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த பங்கேற்பு விவரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    இதன்படி அன்றைய யோகாதின நிகழ்ச்சியில் 42 லட்சத்து 28 ஆயிரத்து 802 குழந்தைகள் பங்கேற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    அதேப்போல 22 லட்சத்து 72 ஆயிரத்து 197 இளம்பருவத்தினர் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக 17 லட்சத்து 37 ஆயிரத்து 440 கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதுதவிர 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாகவும், 24 லட்சத்து 64 ஆயிரம் பேர் அதை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×