search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேஷ் தோபே
    X
    ராஜேஷ் தோபே

    மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு: மந்திரி ராஜேஷ் தோபே

    அதிகபட்சமாக ரத்னகிரியில் 9 பேர் டெல்டா பிளாஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்காவில் 7 பேரும், மும்பையில் 2 பேரும், பால்கர், தானே, சிந்துதுர்க்கில் தலா ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் உருமாறிய டெல்டா பிளஸ்  கொரோனா வைரசால் 3-வது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் மாநிலத்தில் 21 பேர் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினாா். இதில் அவர், "மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 9 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்காவில் 7 பேரும், மும்பையில் 2 பேரும், பால்கர், தானே, சிந்துதுர்க்கில் தலா ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது மாதிரிகளின் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் 21 பேருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த மாதிரிகள் கடந்த மே 15-ந் தேதி முதல் சேகரிக்கப்பட்டவை ஆகும். தற்போது தொற்று பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகிறோம். மேலும் அவர்களின் முந்தைய பயண விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. உருமாறிய டெல்டா பிளஸ் வைரசை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.
    Next Story
    ×