search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    டெல்டா பிளஸ் வைரஸ் கவலையளிக்கக் கூடியது - மத்திய சுகாதாரத் துறை

    இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.

    இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

    இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் 
    டெல்டா-பிளஸ்
     என அழைக்கப்படுகிறது.

    கொரோனா பரிசோதனை

    இந்தப் புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது. இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  வகைப்படுத்தியுள்ளது.

    மேலும், டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ள இடங்களில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×