search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,473 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 188- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,18,795 ஆக உயர்ந்துள்ளது.
    மும்பை:

    மராட்டியத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,473  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட 2 ஆயிரத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 2 லட்சத்து 16 ஆயிரத்து 861 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 188  பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  1,18,795 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9,043  ஆக உள்ளது.  மாநில தலைநகரான மும்பையில் இன்று 568  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Next Story
    ×