search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் சுகாதார ஊழியர்
    X
    தடுப்பூசி போடும் சுகாதார ஊழியர்

    கேரளா - உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி

    கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நேற்று 7,499 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 13,596 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 4 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தாக்குதலுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,154 ஆக அதிகரித்துள்ளது.
     
    இதற்கிடையே, கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கேரளாவில் இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரத்து 793 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தீவிரமாக நோய்வாய்ப்பட்டு படுக்கை நோயாளிகளாக உள்ளவர்களுக்கு வீடி தேடிச்சென்று சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    கேரளாவில் படுக்கை நோயாளிகள் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 2.25 லட்சம் மக்களுக்கு இது போன்று வீடு தேடிச்சென்று தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என  திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவர் சித்ரா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×