search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோப்
    X
    சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோப்

    மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரசின் மாறுபாடு வகையான டெல்டா கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த டெல்டா வகை கொரோனா வைரசே காரணம் என சொல்லப்பட்டது. 

    தற்போது இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

    இந்த புதிய உருமாறிய வைரஸ் கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.

    கோப்புப் படம்

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

    ரத்னகிரியில் 9, ஜல்கானில் 7, மும்பையில் 2, பால்கர், தானே மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 21 பேருக்கு  டெல்டா பிளஸ் வகை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என்றார்.
    Next Story
    ×