என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -இந்தியா சாதனை
Byமாலை மலர்21 Jun 2021 4:51 PM GMT (Updated: 21 Jun 2021 4:51 PM GMT)
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா 2-வது அலை குறையத்தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 3-வது அலை பாதிப்பை தடுப்பூசி போடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். மேலும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். அந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 69 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 8.30 மணி நிலவரப்படி 80.95 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று 30 லட்சத்து 39 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 42 லட்சத்து 65 ஆயிரத்து 157 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: கொரோனாவின் அடுத்த எழுச்சியைத் தடுக்க தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
‘கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிகப்படியான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக, கடினமாக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X