search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நானா படோலே
    X
    நானா படோலே

    மகாவிகாஸ் கூட்டணி நிரந்தரமானது அல்ல, 5 ஆண்டுக்கு தான் அமைக்கப்பட்டது: நானா படோலே

    பா.ஜனதாவும் தனித்து போட்டியிட போகிறோம் என்று தான் கூறிவருகின்றனர். இதற்கு முன் உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 4 கட்சிகளும் தனித்து போட்டியிட்டு உள்ளன.
    மும்பை :

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சிவசேனா ஆண்டு விழாவையொட்டி உரையாற்றினாா். அப்போது அவர் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என ஆவேசமாக பேசினார். சமீப காலமாக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம் என கூறிவரும் காங்கிரஸ் கட்சியினரை முதல்-மந்திரி சாடியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே கூறுகையில், "உத்தவ் தாக்கரே எந்த கட்சியை குறிப்பிட்டு பேசுகிறார் என்பதில் தெளிவு இல்லை.
    பாஜக
    வும் தனித்து போட்டியிட போகிறோம் என்று தான் கூறிவருகின்றனர். இதற்கு முன் உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ்சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய 4 கட்சிகளும் தனித்து போட்டியிட்டு உள்ளன.

    பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக கடந்த 2019-ல் 5 ஆண்டுகளுக்கு மகாவிகாஸ் கூட்டணியை உருவாக்கினோம். அது நிரந்தரமானது இல்லை. எல்லா கட்சிக்கும், அவர்களது கட்சியை பலப்படுத்த உரிமை உள்ளது.

    மேலும் காங்கிரஸ் எப்போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம், ஆக்சிஜன், பிளாஸ்மா வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறது’’ என்றார்.
    Next Story
    ×