search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்மார்களுக்கு தடுப்பூசி
    X
    தாய்மார்களுக்கு தடுப்பூசி

    ஆந்திராவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி

    ஆந்திராவில் தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    விஜயவாடா:

    நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று தணிந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கொரோனா 2வது அலையில் சிக்கி மக்கள் அவதியுற்ற சூழலில், 3வது அலை பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றும்படி  கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    இதேபோன்று நாட்டில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடிய நிலைமை 80 சதவீதம் குறைவதாக மத்திய அரசு கூறி உள்ளது. 

    பொது சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குநர் கீதா பிரசாதினி

    ஆந்திர பிரதேசத்திலும் இன்று மெகா தடுப்பூசி திட்டம் நடைபெறுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 12000 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணி நிலவரப்படி 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  தடுப்பூசி போட்டிருந்தனர். மாலையில் முகாம் நிறைவடையும் போது, இந்த எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதுபற்றி பொது சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குனரான மருத்துவர் கீதா பிரசாதினி கூறும்போது, இந்தியாவில் கொரோனா 3வது அலை பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் உள்ளது. எனவே, தாய்மார்களுக்கு 
    கொரோனா தடுப்பூசி
     செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.  நேற்று வரை 5.5 லட்சம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  இதுதவிர, மீதமுள்ள 4.55 லட்சம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்’ என்றார்.


    ஆந்திராவில் தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது. முதல் டோசை 1.06 கோடி பேரும், 27.02  லட்சம் பேர் இரண்டாவது டோசும் தடுப்பூசி போட்டுள்ளனர். 
    Next Story
    ×