search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அசாமில் தினமும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

    அசாமில் ஏற்கெனவே 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா கூறியுள்ளார்.
    கவுகாத்தி:

    முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    மாநிலத்தில் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறாது. 

    ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தடுப்பூசி திட்டத்தில் கவனம் செலுத்தும். அடுத்த 10 நாள்களுக்கு தினந்தோறும் 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தால், ஜூலை மாதத்திலும் அசாம் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைப்பதை 
    மத்திய அரசு
     உறுதி செய்யும். 

    ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

    கோப்புபடம்

    மேலும் இந்த மாதத்திற்குள் தடுப்பூசி போடுமாறு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார். பிற அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் தொழிலாளர்கள், மக்களை ஊக்குவிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×