search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் காட்சி
    X
    இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் காட்சி

    கொரோனா 2வது அலையின்போது பீகாரில் கணக்கில் காட்டப்படாத 75000 மரணங்கள்

    கூடுதலாக பதிவான மரணங்கள் எப்போது நிகழ்ந்தன என்று அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்றாலும், அவை 2021இல் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த காலகட்டத்தில், அதாவது இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 75000 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், இந்த இறப்புகளுக்கான காரணங்கள் விவரிக்கப்படவில்லை என சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. இந்த இறப்பு எண்ணிக்கையானது, அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ கொரோனா மரணங்களைவிட 10 மடங்கு அதிகம் ஆகும். 

    2019 ஜனவரி முதல் மே மாதம் வரை பீகாரில் 1.3 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளன. 2021ல் இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2.2 லட்சம் இறப்புகள் பதிவாகியிருப்பதாக பதிவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 82,500 ஆகும். இதில், பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மே மாதத்தில் பதிவாகி உள்ளன. 

    2021 ஜனவரி-மே மாதங்களில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 7717 என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது, இந்த மாத தொடக்கத்தில் கூடுதலாக 3951 இறப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட புள்ளிவிவரம் ஆகும். இந்த மரணங்கள் எப்போது நிகழ்ந்தன என்று அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்றாலும், அவை 2021இல் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

    அப்போதும்கூட, மாநிலத்தில் ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வ கொரோணா மரணங்களின் எண்ணிக்கையானது, பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான இறப்புகளில் ஒரு பகுதிதான். துல்லியமாக 74,808 மரணங்கள் கூடுதல் பதிவாகி உள்ளது.

    இதை வைத்து பார்க்கும்போது கொரோனா மரணங்களை அரசு குறைத்து காட்டுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    Next Story
    ×