search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    பெங்களூருவில் ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை

    கர்நாடகத்திலும் சிக்கமகளூரு, பல்லாரி, தட்சிண கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    பெங்களூரு :

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்ய தொடங்கியதில் இருந்து, அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. கர்நாடகத்திலும் சிக்கமகளூரு, பல்லாரி, தட்சிண கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெங்களூருவிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிய வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில, பெங்களூருவிலும் நேற்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. அதாவது நேற்று ஒரு லிட்டர்
    பெட்ரோல்
    விலை 100 ரூபாய் 17 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பெட்ரோல் விலையை போன்று டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. பெங்களூருவில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.97 காசுகளாக விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×