search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 5,983 பேருக்கு கொரோனா: 138 பேர் பலி

    கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 2,817 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 207 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 442 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5,983 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு நேற்று 138 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

    ஒரே நாளில் 10 ஆயிரத்து 685 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 10 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 726 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 3.77 சதவீதமாக ஆக உள்ளது.

    பெங்களூரு நகரில் 1,209 பேர், பாகல்கோட்டையில் 22 பேர், பல்லாரியில் 128 பேர், பெலகாவியில் 172 பேர், பெங்களூரு புறநகரில் 226 பேர், பீதரில் 8 பேர், சாம்ராஜ்நகரில் 98 பேர், சிக்பள்ளாப்பூரில் 119 பேர், சிக்கமகளூருவில் 198 பேர், சித்ரதுர்காவில் 110 பேர், தட்சிண கன்னடாவில் 679 பேர், தாவணகெரேயில் 153 பேர், தார்வாரில் 86 பேர், கதக்கில் 34 பேர், ஹாசனில் 424 பேர், ஹாவேரியில் 42 பேர், கலபுரகியில் 25 பேர், குடகில் 152 பேர், கோலாரில் 145 பேர், கொப்பலில் 48 பேர், மண்டியாவில் 309 பேர், மைசூருவில் 596 பேர், ராய்ச்சூரில் 16 பேர், ராமநகரில் 37 பேர், சிவமொக்காவில் 229 பேர், துமகூருவில் 289 பேர், உடுப்பியில் 166 பேர், உத்தரகன்னடாவில் 169 பேர், விஜயாப்புராவில் 83 பேர், யாதகிரியில் 11 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் 17 பேரும், பல்லாரியில் 5 பேரும், பெலகாவியில் 6 பேரும், பெங்களூரு புறநகரில் 2 பேரும், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூரில் தலா 4 பேரும், சிக்கமகளூருவில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 11 பேரும், தார்வாரில் 9 பேரும், ஹாசனில் 7 பேரும், கோலாரில் 5 பேரும், மைசூருவில் 26 பேரும், சிவமொக்காவில் 5 பேரும் உள்பட 138 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 2,817 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 207 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×