search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள்
    X
    டாக்டர்கள்

    கொரோனா 2-வது அலையில் 730 டாக்டர்கள் பலி: இந்திய மருத்துவ சங்கம் தகவல்

    கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை 748 டாக்டர்களை பலி கொண்டதாகவும், அதேநேரம் 2-வது அலை மிக குறைந்த காலத்திலேயே 730 டாக்டர்களை காவு கொண்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
    புதுடெல்லி

    கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியது. இதில் மருத்துவ துறையினரும் அதிக அளவில் பலியானார்கள். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஏராளமான டாக்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்.

    அந்தவகையில் 730 டாக்டர்களை கொரோனாவின் 2-வது அலை பலி கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

    இதில் அதிகபட்சமாக பீகாரில் 115 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து டெல்லியில் 109 பேரும், உத்தரபிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்காளத்தில் 62 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்கண்டில் 39 பேரும், ஆந்திராவில் 38 பேரும்
    கொரோனாவால் மரணத்தை தழுவியதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட பட்டியல் தெரிவிக்கிறது.

    Next Story
    ×