search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிராக் பஸ்வான்
    X
    சிராக் பஸ்வான்

    நான் சிங்கக்குட்டி... சட்டப் போராட்டத்திற்கு தயார் -சிராக் பஸ்வான் ஆவேசம்

    அதிருப்தி குழுவைச் சேர்ந்த பசுபதிகுமார் பராசை, மக்களவை கட்சி தலைவராக நியமித்தது கட்சி விதிகளுக்கு முரணானது என்று சபாநாயகருக்கு சிராக் பஸ்வான் கடிதம் எழுதி உள்ளார்.
    பாட்னா:

    லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் சிராஜ் பஸ்வான் அந்த கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

    இந்த கட்சிக்கு சிராக் பஸ்வானுடன் 6 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் சிராக் பஸ்வானின் சித்தப்பா பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட ஐந்து எம்.பி.க்கள்  சிராக் பஸ்வானை ஓரங்கட்டினர். அத்துடன், அவர்கள் பாராளுமன்றத்திற்கான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக பசுபதிகுமார் பராசை தேர்ந்தெடுத்தனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி, தங்களை தனி குழுவாக அங்கீகரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஏற்றுக்கொண்டார். 

    மேலும், சிராக் பஸ்வான் தேசிய தலைவர் பதவியில் இருந்து நிக்கப்பட்டதாக, விரைவில் தேசிய தலைவரை நியமிக்க தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை சிராக் பாஸ்வான் ஏற்கவில்லை. தனக்கு எதிராக செயல்பட்ட 5 எம்பிக்களை கட்சியில் இருந்த நீக்கிவிட்டதாகவும், பசுபதிகுமார் பராசை, மக்களவை கட்சி தலைவராக நியமித்தது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் கூறி கடிதம் எழுதினார். சட்டப் போராட்டத்திற்கும் தயாராகிவிட்டார்.

    இதுதொடர்பாக சிராக் பஸ்வான் கூறுகையில், ‘அதிருப்தி குழுவினருக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த தயாராகிவிட்டேன். நான் ராம் விலாஸ் பஸ்வானின் மகன். நான் சிங்கக் குட்டி.

    தந்தை காலமானபோதுகூட நான் அனாதையாக உணரவில்லை. ஆனால், என் சித்தப்பா இப்படி செய்துவிட்டார். நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், உங்களை பாராளுமன்ற குழு தலைவர் ஆக்கியிருப்பேன். கிளர்ச்சிக்குழு அதன் தலைவராக ஒருவரை எவ்வாறு தேர்ந்தெடுத்தது என்பது குறித்து, நாம் ஒரு நீண்ட சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்’ என்றார்.
    Next Story
    ×