search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாணா பட்டோல்
    X
    நாணா பட்டோல்

    முதல்வர் ஆசையை வெளிப்படுத்திய காங்கிரஸ் தலைவர்: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் சலசலப்பு

    பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்தித்ததில் இருந்து மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணமே உள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் (மகா விகாஸ் அகாதி) ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவ சேனாவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்கிறார்.

    இந்த கூட்டணியை எப்படியாவது கவிழ்த்து விட பா.ஜனதா நினைக்கிறது. ஐந்து வருடத்தை நிறைவு செய்ய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சரத் பவாரை பா.ஜனதா தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் சந்தித்து பேசினார். அதன்பின் பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

    இதனால் பா.ஜனதாவுடன் சிவ சேனா மீண்டும் இணையுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கான காங்கிரஸ் தலைவர் நாணா பட்டோல், தனக்கு முதல்வர் ஆசை இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார்.

    கட்சி தொண்டர்களிடையே பேசும்போது, ‘‘வருகின்ற உள்ளாட்சி தேர்தல், அதன்பின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனியாக போட்டியிடும். நீங்கள் என்னை முதலமைச்சராக பார்க்க மாட்டீர்களா?’’ என நாணா பட்டோல் எனக் கூறியுள்ளார். இவரின் கருத்து காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி மேல் ஆசை இருக்கிறது என்பதை காட்டுகிறது.

    ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், ‘‘கனவு காண்பது குற்றமாகாது. கூட்டணியில் ஒவ்வொருவருக்கும் அவரவர் கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என நினைக்கும் உரிமை உள்ளது. இறுதி முடிவு கூட்டணி அல்லது சோனியா காந்தி அல்லது சரத் பவார் அல்லது உத்தவ் தாக்கரே மட்டுமே எடுக்க முடியும்’’ என்றார்.

    அஜித் பவார்
    அஜித் பவார்

    இரண்டரை ஆண்டுகள் கழித்து உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்ற உறுதி செய்யப்படாத செய்தி தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில், சிவ சேனா அதை மறுத்துள்ளது.
    Next Story
    ×