என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடவுள் ஸ்ரீ ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி - ராகுல் காந்தி
Byமாலை மலர்14 Jun 2021 1:25 PM GMT (Updated: 14 Jun 2021 1:25 PM GMT)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுடெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறக்கட்டளை பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சம்ப்ராத் வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற நிலத்துக்கு பதிவுதான் அன்றைய தினம் செய்தனர் என விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,
கடவுள் ஸ்ரீ ராமர் என்பவர் நீதி, உண்மைக்கு நிகரானவர். அவரது பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×