search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி ஒரே நாளில் நான்கு உடை மாற்றுவதாக கூறி வைரலாகும் தகவல்

    பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் பல்வேறு தலைவர்களை சந்திக்க நான்கு முறை உடை மாற்றுகிறார் எனும் தலைப்பில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    உலகளவில் அதிகம் உற்று நோக்கப்படும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இவரது பேச்சு மட்டுமின்றி உடை மற்றும் ஒவ்வொரு செயல்பாடுகளும் செய்திகளில் பேசும் பொருளாகி வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி ஒரே நாளில் வெவ்வேறு  தலைவர்களை சந்திக்க நான்கு முறை உடை மாற்றுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    வைரல் பதிவுகளில் பிரதமர் மோடி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மணிப்பூர் ஆளுநர் நஜிமா ஹெப்துல்லா, அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் ஆகியோரை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    `எந்த வகையிலான ஏழ்மை இது? ஒரே நாளில் பல்வேறு தலைவர்களை சந்திக்க நான்கு முறை உடை மாற்றி இருக்கிறார்,' எனும் தலைப்பில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அதனுடன் வலம்வரும் தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

    வைரல் புகைப்படங்களில் உள்ளது போன்று பிரதமர் மோடி வெவ்வேறு தலைவர்களை ஒரே நாளில் சந்திக்கவில்லை. உண்மையில் இந்த சந்திப்புகள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 11 வரையிலான நாட்களில் நடைபெற்றவை ஆகும். இதுகுறித்து செய்திகள் அந்தந்த தினங்களில் வெளியாகி இருக்கின்றன.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×