search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மேந்திர பிரதான்
    X
    தர்மேந்திர பிரதான்

    ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு காரணம் என்ன?- மத்திய அமைச்சர் விளக்கம்

    கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதால், நலத்திட்டங்களுக்கு செல்லும் பணத்தை சேமிக்க வேண்டியுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரேல் விலை 100 ரூபாயை கடந்த நிலையில், டீசல் விலை 95 ரூபாயை தொட்டுள்ளது.

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை டாலருக்கு மிகப்பெரிய அளவில் உயராத நிலையிலும், இந்தியாவில் தினந்தோறும் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலின்போது விலை ஏற்றப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவில் உயர்ந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் வில உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக்கான விளக்கத்தை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தர்மேந்திர பிரதான் கூறுகையில் ‘‘தற்போதைய பெட்ரோல், டீசல் விலை மக்களுக்கு மிகப்பெரிய விளைவை கொடுக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், மத்திய- மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடிகள் செலவிட்டுள்ளன. இந்த கடினமான நேரத்தில், நலத்திட்டங்களுக்கான பணத்தை நாங்கள் சேமித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×