search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
    X
    ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

    ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வினியோகம்

    ரெயில்வே நிர்வாகம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு திரவநிலை ஆக்சிஜனை கொண்டு செல்ல முக்கிய பங்கு வகித்தது.
    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருக்கும்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் இந்திய ரெயில்வே நிர்வாகம் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற ரெயிலை அறிமுகம் செய்து, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக ஆக்சிஜனை கொண்டு செல்லும் பணியை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செய்தது. இது இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது.

    தற்போது வரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இந்தியா முழுவதும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை சுமந்து சென்றுள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    421 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களுக்கு மட்டும் 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் கொண்டு வந்துள்ளது. 

    ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

    ஆந்திராவுக்கு 3600 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3700 மெட்ரிக் டன், தமிழகத்திற்கு 4900 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை சப்ளை செய்துள்ளது.

    ஏப்ரல் 24-ந்தேதி மகாராஷ்டிராவில் முதன்முறையாக 126 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு சென்றது. 

    உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், ஹரியானா, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது.
    Next Story
    ×