search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூசாரிகள் தர்ணா போராட்டம்
    X
    பூசாரிகள் தர்ணா போராட்டம்

    கேதார்நாத் கோயில் முன்பு 3வது நாளாக பூசாரிகள் தர்ணா போராட்டம்

    சார் தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை உத்தரகாண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரியம் ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். ஆண்டுதோறும் கோடைகாலத்தில், இந்துக்கள் இந்த நான்கு தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது, வடமொழியில் சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை உத்தரகாண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரியம் ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பூசாரிகள்

    இந்நிலையில், உத்தரகாண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரியத்தை கலைக்க வேண்டும் என்று பூசாரிகள் கூறி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கேதார்நாத் கோயில் முன்பு அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி, கோயில் முன்பு அமர்ந்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது.
    Next Story
    ×