search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாநிலங்களுக்கு 11 லட்சம் தடுப்பூசி - 3 நாளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை

    மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனாவின் இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு முழுமூச்சுடன் போராடும் வேளையில் தடுப்பூசி போடுவது தீவிரம் ஆகி வருகிறது.இதுவரை தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழும் 25 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரத்து 810 தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.

    இவற்றில் 24 கோடியே 76 லட்சத்து 58 ஆயிரத்து 855 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் அடுத்த 3 நாளில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 300 தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது
    Next Story
    ×