search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    ‘கோவின்’ இணையதளத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததா? - மத்திய அரசு மறுப்பு

    ‘கோவின்’ இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கி இருப்பதாகவும், அதில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின் தகவல்கள் கசிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ‘கோவின்’ இணையதளம் ஒருங்கிணைத்து வருகிறது. தடுப்பூசிக்காக இந்த இணைதளத்திலேயே பதிவு செய்வதற்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இந்த இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கி இருப்பதாகவும், அதில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின் தகவல்கள் கசிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இது பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோப்புப்படம்


    ஆனால் இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், கோவின் இணையதளத்தில் இருந்து எந்த தகவல்களும் கசியவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை நேரத்துக்கு நேரம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    அதேநேரம் இந்த பிரச்சினை குறித்து மத்திய தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
    Next Story
    ×