search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவால்
    X
    கெஜ்ரிவால்

    கொரோனாவின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்பு - கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

    கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, 2-வது அலைக்கு எதிரான போரில் பெருத்த உயிர்ச்சேதங்களை சந்தித்தது. பெரும் பொருளாதார இழப்புகளையும் எதிர்ெகாண்டு வருகிறது.

    பல மாநிலங்களில் ஊரடங்கு, பொது முடக்கங்களை அமல்படுத்தி, கடுமையான கட்டுப்பாட்டையும் விதித்து இப்போதுதான் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கத்தொடங்கி உள்ளது.

    இந்த தருணத்தில் டெல்லியில் உள்ள 9 ஆஸ்பத்திரிகளில், அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆக்சிஜன் ஆலைகளை தொடங்கி வைத்தார்.

    அதனிடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன. இதற்கான அறிகுறிகள் இங்கிலாந்தில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. அங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

    கொரோனாவின் 3-வது அலை நம்மைத் தாக்கக்கூடாது என்று பிரார்த்திப்போம். ஆனால் அதையும் தாண்டி 3-வது அலை வந்தால், டெல்லி மீண்டும் ஒன்றுபட்டு நின்று போராடும்.

    கொரோனா வைரஸ்


    2-வது அலையை டெல்லி சந்தித்தபோது ஒன்றுபட்டு நின்று போராடி, கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, பரவலை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள மக்களைப் பாராட்டுகிறேன்.

    கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×