search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தேவியை வழிபடும் பக்தர்
    X
    கொரோனா தேவியை வழிபடும் பக்தர்

    உ.பி. கிராமத்தில் உருவான கொரோனா தேவி கோவில் -மனமுருகி பிரார்த்தனை செய்யும் மக்கள்

    காலரா, அம்மை போன்ற நோய்கள் பரவியபோது மக்கள் மாரியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற தெய்வ வழிபாட்டை உருவாக்கி வழிபட்டனர்.
    லக்னோ:

    கொரோனா பெருந்தொற்று மனித சமூகத்தை படாதபாடு படுத்திவருவதால், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்படி அவரவர் தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர். 

    காலரா, அம்மை போன்ற நோய்கள் பரவியபோது மக்கள் மாரியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற தெய்வ வழிபாட்டை உருவாக்கி வழிபட்டனர். அதேபோன்று, தற்போது மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தொற்றின் வேகம் குறையவும் வேண்டி பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர். 

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் காட்சி

    இந்த வழிபாடுகள் அனைத்தும் சாஸ்திரங்களின்படி நடைபெறாவிட்டாலும், மக்களாகவே இதற்கான நெறிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

    அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டி உள்ளனர். வேப்ப மரத்தடியில் கொரோனா தேவிக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்துகின்றனர். இங்கு ஏராளமான மக்கள் வருகை தந்து, கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்கின்றனர். இந்த கொரோனா தேவிக்கு மாஸ்க் அணிவித்துள்ளனர். கொரோனா தேவிக்கு இனிப்பு படையலிட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

    தமிழகத்தில் கோவை இருகூர் பகுதியில், காமாட்சி புரி ஆதீனம் சார்பில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×