search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாடு முழுவதும் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு

    வெளி நாட்டுக்கு செல்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு செல்லும் முறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது மக்களுக்கு   தடுப்பூசி  செலுத்தப்படுகிறது. அதேபோல் மக்களிடம் எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பதை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை கண்டறிவதற்காக நாடு முழுவதும் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் ஆய்வை (சிரோ) சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த மாதம் தொடங்க உள்ளது.

    இது குறித்து நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூறியதாவது, நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத்தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 5 சதவீதம் வரை குறைகிறது.

     

    கொரோனா பரிசோதனை

    ஆனாலும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலின் வீதத்தை கண்டறிய ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் ஆய்வு நடத்தப்படும்.

    மத்திய அரசின் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு இறுதி முடிவு எடுக்க முடியாது என்பதால் மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் ஆய்வை நடத்த வேண்டும். இந்த ஆய்வுகளை மாநில அரசுகளும் நடத்தி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

    இதையும் படியுங்கள்.... கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்த மக்கள்

    கடந்த மே 7-ந் தேதி இந்தியாவில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது 78 சதவீதம் குறையத்தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து சுகாதார கட்டமைப்பின் மீதான தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த 6 மாதங்களில் பயோ லாஜிக்கல் இ, ஜய்டஸ் லியாவின் டி.என்.ஏ. தடுப்பூசி ஆகியவை இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. இதில் ‘இ’   தடுப்பூசி  புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு சில தடுப்பூசிகளுக்கு   வெளிநாடுகள் பாஸ்போர்ட்டில் அங்கீகாரம் அளிப்பது தொடர்பான விவாதம் உலக சுகாதார அமைப்பில் தொழில்நுட்ப ரீதியில் நடைபெற்று வருகிறது.

    தற்போதைக்கு வெளி நாட்டுக்கு செல்பவர்கள்   கொரோனா பரிசோதனை செய்து கொண்டு செல்லும் முறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிரோ சர்வே ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் 4-வது முறையாக நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×