search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதமடைந்த விவசாயிகள் கூடாரம்
    X
    சேதமடைந்த விவசாயிகள் கூடாரம்

    டெல்லியில் புழுதி புயல் - போராடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதம்

    டெல்லி, உத்தர பிரதேசம் மாநில எல்லையான காசிப்பூர் பகுதியில் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து தங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பேரணியாக டெல்லிக்குப் புறப்பட்டனர்.

    கனமழை, கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே, விவசாயிகள் டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநில எல்லையான காசிப்பூர் பகுதியில் கூடாரங்கள் அமைத்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் நேற்றிரவு திடீரென பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்யத் தொடங்கியது.  அதனுடன் புழுதி புயலும் வீச தொடங்கியது.

    சிறிது நேரத்தில் வேகமெடுத்த புழுதி புயலால், விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அவர்கள் வைத்திருந்த பேனர்கள் சரிந்தன. சிலரது கூடாரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால் தூங்குவதற்கு வழியின்றி இரவில் அவர்கள் தவித்தனர்
    Next Story
    ×