search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: குமாரசாமி

    சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள இருக்கும் இந்த சூழ்நிலையில், கன்னட மொழிக்கு அவமதிப்புகள் நிகழ்ந்தன. இதுகுறித்து பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் வாய் திறக்கவில்லை.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கன்னட மொழிக்கு அவதூறு ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பாஜகவினர் பேசி வருகிறார்கள். இந்த அரசுக்கு மக்களின் நலன் முக்கியமா? அல்லது ஆட்சி தலைமையை மாற்றுவது முக்கியமா?. மயானங்களில் சிதைகள் எரியூட்டப்படும் பணி இன்னும் ஓயவில்லை. அந்த பணி எப்போது ஓயும் என்றே தெரியவில்லை. இத்தகைய நேரத்தில் சில்லரை அரசியல் தேவையா?.

    கொரோனா பரவலை அரசு நிர்வகித்த விதம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசு தனது தவறை திருத்திக்கொள்ளும் என்று நாங்கள் அரசியல் செய்யாமல் அமைதியாக இருந்தோம். ஆனால் பாஜக ஆட்சி அதிகார ஆசையை வெளிப்படுத்தினால் நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்?.

    கர்நாடகத்தில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இன்னொரு புறம் அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. நெருக்கடியான நேரத்தில் பாஜகவில் எழுந்துள்ள அதிகார மோதல் மற்றும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
    காங்கிரஸ்
    கொரோனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு நடந்து கொள்ளுவது சரியல்ல. இரு கட்சிகளும் சுயபரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். இதை மக்கள் கவனிக்க வேண்டும்.

    சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள இருக்கும் இந்த சூழ்நிலையில், கன்னட மொழிக்கு அவமதிப்புகள் நிகழ்ந்தன. இதுகுறித்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வாய் திறக்கவில்லை. இவர்கள் கர்நாடகத்தில் தான் அரசியல் செய்கிறார்கள் அல்லவா?. கர்நாடகத்தின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்?.

    இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×